Friday, 11 January 2013

நீ எங்கே!!!!!!!!!!!!!!

உன்னை எங்கே என தேடும் என் கண்களுக்கு தெரியவில்லை
காணும் அனைத்திலுமே நீ கலந்தவன் என்று....

உன் குரலை கேட்க துடிக்கும் என் காதுக்கும் தெரியவில்லை
நான் பேசும் மொழியே உன்னுடையது என்று.

உன் மடி சாய நினைக்கும் இந்த சிந்தைக்கும் தெரியவில்லை
நீ என்னுள்ளே நிறைந்தவன் என்று....

ஒவ்வொரு முறை சுவாசிக்கும் என் மூச்சு காற்றுக்கு தெரியும்
என் சுவாசமே நீ தான் இன்று ...


பிரிவுகளை மறக்க நினைவுகளை கொண்டு வாழும் உலகில்.
உன் நினைவுகளால் மட்டுமே உயிர் வாழ்கிறேன் நான்...
மண் சேரும் முன்னே உன் மடி சேர்வேன் என்ற நம்பிக்கையில்.

நீ ஒரு ரோஜாப்பூ

நீ ஒரு ரோஜாப்பூ...........

"அது மறைக்கிறது தன மணத்தை....
நீ மறைக்கிறாய் உன் மனதை....

"அதன் மேல் இருப்பதோ கூர்மையான முற்கள் ...
உன்னில் வருவதோ கடுமையான சொற்கள்....

" அந்த முற்கள் குத்துகையில் உடல் தான் வலிக்கிறது...
உந்தன் சொற்கள் கேட்கையில் என் உள்ளமே வலிக்கிறது"..

அன்பு மகள்


பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..

பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...

அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...

இன்று அந்த நிலை இல்லை என்னில்...

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...

என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.

இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.

எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....

உனக்காக வாடுகிறது

உன்னை நினைப்பதால்

உலகை மறப்பதால்

உன்னோடு வாழ துடிப்பதால்

உன் பெயரை உச்சரிப்பதால்

உன் மூச்சு காற்றை தேடுவதால்

உன் தீண்டலில் நாணுவதால்

உன் பார்வையில்  உலகை காண்பதால்

உறவாக உன்னை மட்டுமே நினைப்பதால்

உன்னை உன்னை என்று சொல்லும் போதெல்லாம்
என்னையே நான் நினைத்து சிரிப்பதால்,

இன்று,

நீ மட்டும் வேண்டும் என்று  என் மனம் வாடுகிறது.

உன்னால் இறக்கிறேன்....

நிஜத்தில் உயிருடன் இருக்கிறேன்

ஆனால்,

பல முறை இறக்கிறேன்...

அருகில் நீ

இல்லாததால்..

நீ தான்


"அன்று அவனோடு சென்ற கடற்கரை சாலையில்
இன்று நான் மட்டும் தனியாக"

அன்று அவன் நிஜத்தினில்..
இன்று அவன் என் நினைவினில்..

என் நினைவிலும் நீ தான்..
நிஜத்திலும் நீ தான்..

இருப்பிலும் நீ தான்..
இறப்பிலும் நீ தான்..

என் இறுதி வரை நீ மட்டும் தான்..